போலீஸ்க்கு ஆதரவுடன் கஞ்சா விற்பனை அமோகம் - மருத்துவர் ராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அடுத்த தைலாபுர தோட்டத்தில் செயலாளர்களை சந்தித்தார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். செய்தியாளரிடம் மருத்துவர் ராமதாஸ் பேசுகையில், சாதிவாரி கணக்கேடுப்பு நடத்தவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு சாதிவாரி கணக்கேடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர். ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதாக கூறும் போலீசார், ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை அழிக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police knew that the sale of ganja was rampant Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->