பட்டியலின பெண்ணை சாதி பெயர் சொல்லி திட்டிய தீட்சிதர்கள்! புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டும் போலீஸ்!
The police threatened the woman who complained against Dikshidar who insulted her caste
பொய் வழக்கு போடுவதாக போலீசார் மிரட்டல்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்பவர் நடராஜர் கோயில் மண்டகப்படி மீது ஏறி சாமி தரிசனம் செய்ததால் தன்னை சாதிப் பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஜெயசீலா வீட்டிற்கு வந்த எட்டு இருக்கும் மேற்பட்ட போலீசார் மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். புகார் அளித்த என்னை போலீசார் இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி புகாரை வாபஸ் பெரும்படி மிரட்டுவதாக ஜெயசீலா கூறியுள்ளார். மேலும் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் பொய் வழக்கில் கைது செய்வோம் என போலீசார் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த விவகாரத்தில் அறநிலையத்துடைய செயலாளர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டு தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
The police threatened the woman who complained against Dikshidar who insulted her caste