ஹோட்டல் உரிமையாளரை ஷூவை கழட்டி அடிக்கச் சென்ற போலீஸ்! பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டம் நேதாஜி பைபாஸ் சாலையின் அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதற்கு அருகே புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.

இந்நிலையில், போலீசார் இந்த போலீஸ் நிலையத்தில் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். தன்னை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கமாக வைத்து இருந்தார், இதன்படி அந்த ஹோட்டலில் சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பின்பு தருகிறேன் என சொல்லிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே,  நேற்று சாப்பிட்ட உணவிற்கு  சப்-இன்ஸ்பெக்டர் காவேரி பணம் தராமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதன்பிறகு மாலை உணவு சாப்பிட வந்த சப்-இன்ஸ்பெக்டர், உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது ஹோட்டல் உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து அவரிடம் பணம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி கடை உரிமையாளர் முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், சப்-இன்ஸ்பெக்டர் காவேரி பணத்தை தூக்கி வீசிவிட்டு கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அவரை பாய்ந்து அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police who went to beat the hotel owner by taking off his shoes Dismissal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->