போலி வாக்குறுதிகளை அளிக்கும் இரட்டை என்ஜின் பூட்டிய அரசாக புதுச்சேரி அரசு உள்ளது..எதிர்க்கட்சித் தலைவர் சிவா கடும் விமர்சனம்!  - Seithipunal
Seithipunal


தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றி போலி வாக்குறுதிகளை அளிக்கும் இரட்டை என்ஜின் பூட்டிய அரசாக  புதுச்சேரி அரசு  செயல்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விமர்சனம் செய்துள்ளார்.

வில்லியனூர் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சண்முகா திருமண நிலையத்தில்  நடந்தது.கூட்டத்திற்கு தொகுதி அவைத்தலைவர் ஜலால் அனீப் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன் வரவேற்று பேசினார்.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: – தேர்தலில் ஒருவர் நிற்க வேண்டும் என்றால் அவர் நிற்கின்ற தொகுதியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள். ஆனால் கடந்த 2021–ஆம் ஆண்டு தேர்தலில் தலைமைக் கழகம் சொன்னதற்காக என்னை 20 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களை பிரிந்து முதல் முறையாக வில்லியனூரில் நின்றேன். என் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்தார்கள்.

 எதிர்த்து போட்டியிட்டவர் சாதாரண வேட்பாளர் இல்லை. செல்வாக்கு மிக்கவர் என்றாலும் மக்கள் என்னை தேர்வு செய்தார்கள். மக்கள் நம்பிக்கையை ஒருபோதும் நான் வீணடிக்க மாட்டேன். மக்களுக்கு அளித்த 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆளும் கட்சியினர் அதிகாரிகளை மாற்றி பணி செய்ய தொடர்ந்து இடையூறு செய்தாலும்கூட வில்லியனூர் தொகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணியை நான் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வேன். 

மக்களுக்கான தேவைகள் நியாயமாக இருப்பதால் அதிகாரிகள் தடையின்றி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்து அதிகளவில் பணிகள் நடக்கின்றன. கஸ்தூர்பாய் திருமண மண்டபம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சுல்தான்பேட்டை, ஜி.என்.பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன. உங்கள் பகுதியில் ஏதேனும் பணிகள் விடுப்படிருந்தால் அதை என்னிடம் தெரிவித்தால் அப்பணியையும் இந்த ஓராண்டுக்குள் நிறைவேற்றி தருகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு வில்லியனூர் அண்ணா சிலை பக்கத்தில் அவரது நினைவு நாளுக்கு முன் சிலை நிறுவப்படும்.

தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றி போலி வாக்குறுதிகளை அளிக்கும் அரசாக இரட்டை என்ஜின் பூட்டிய அரசு இங்கு செயல்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் எந்த தொகுதியிலும் செய்யாத வளர்ச்சிப் பணிகளை நான் வில்லியனூரில் அதிகளவில் செய்துள்ளேன். அதை சாதனை புத்தகமாக வெளியிட்டு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். ஒன்றிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒதியம்பட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் ரூ. 69 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. தொகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட கும்பாபிஷேகம் செய்யப்படும். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்தாலும் கூட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லையே என்ற கேள்வி எழும். உறுதியான நம்பிக்கையோடு இருங்கள் காலம் கட்டாயம் பதில் சொல்லும். தேர்தல் வருவதற்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள காரணத்தால் தொகுதியில் உள்ள 38 பூத்களில் கமிட்டி அமைத்து பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, தர்மராஜன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி செல்வநாதன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, அயலக அணி அமைப்பாளர் ஷாஜகான், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி பழநிசாமி, விவசாய அணி தலைவர் நாவப்பன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.இதில், மாநில துணைத் தலைவர்கள் ஹாஜ்பாய், தாஹா, கதிரவன், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராமதாஸ், காளி, தேசிங்கு, கலிமுல்லா, தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Puducherry government is a double engine locked government that makes false promises Leader of Opposition Siva


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->