பாஜகவின் கைக்கூலியாக புதுச்சேரி அரசு உள்ளது..முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும்தாக்கு!
The Puducherry government is a stooge of the BJP. Former Chief Minister V Narayanasamy
2026-ல் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்த பின்னர் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையின் படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தார்.அதன்படி இந்த வரி உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிரதேசங்களில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய 4 பிரதேசங்களில் அரசு பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.
இந்தநிலையில் புதுச்சேரியில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்வுக்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.அந்தவகையில்அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் புதுவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி 2026-ல் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்த பின்னர் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.மேலும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுள்ளனர் என்றும் இந்த விலை உயர்வை அரசு மறு பரிசீலனை செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கைவிடுத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அறிவிப்பு முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார் என்றும் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி, வெள்ளம் சக்கரை போன்ற பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கூறிய அவர் தொழில் அதிபரை அழைத்து வந்து ஆட்சி அமைத்து கொள்ளை அடிக்க சிலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்ச்சித்தர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.
English Summary
The Puducherry government is a stooge of the BJP. Former Chief Minister V Narayanasamy