இந்திய குடும்பங்களின் பொருளாதாரம் 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி! "ப்ளூம் வெண்ட்சர்ஸ்" அறிக்கை!
The rich get richer and the poor get poorer Bloom Ventures report
இந்தியா மக்கள் தொகையில் சுமார் 100 கோடி பேர் தங்கள் இஷ்டப்படி பணத்தை செலவழிக்க முடிவதில்லை என ஆய்வில் வெளியாகி உள்ளது.
"ப்ளூம் வெண்ட்சர்ஸ்" என்னும் முதலீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகையில், 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வளர்ந்து வரும் நுகர்வோர்களாக 30 கோடி மக்கள் தயக்கத்துடன் செலவு செய்வதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

அதேசமயம் இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி இருக்கின்றனர். ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நுகர்வோர் திறனின் ஏற்பட்டுள்ள சரிவுக்கு மக்களின் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்து இருப்பதும் முக்கிய காரணம் என்கிறது ப்ளூம் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை.
குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, இந்தியா குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வரி செலுத்தும் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரின் வருமானம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேபோல் மார்செல்லஸ் முதலீட்டு நிறுவனமும், இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்தர மக்கள் நசுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
English Summary
The rich get richer and the poor get poorer Bloom Ventures report