சத்தியமங்கலம் அருகே தலைவலியால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே தலைவலி காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த உதயண்டியூர் பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மனைவி நாகரத்தினம் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நாகரத்தினம் கடந்த சில நாட்களாகவே தலை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று திடீரென தலை வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு நாகரத்தினம் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளார்.

இதைப் பார்த்த கணவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நாகரத்தினம் தூக்குப் போட்டுக் கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனே நாகரத்தினத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நாகரத்தினம் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman committed suicide by hanging herself with a headache


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->