ஹாரன் அடித்தது தப்பா?.. அரசு பேருந்தை வழிமறித்து... ஓட்டுநர் மீது தாக்குதல்.! இளைஞர்கள் அட்டூழியம்...! - Seithipunal
Seithipunal


காங்கேயத்தில் அரசு பேருந்தை நடுரோட்டில் வழிமறித்து ஓட்டுநரை சரமாரியாக இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பெயர்ந்தை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில், பேருந்து அரச்சலூர் அருகே சென்றபோது இளைஞர்கள் சிலர் மதுபோதையில் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இதனால் பேருந்து ஓட்டுநர் மேகநாதன் ஹாரன் அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பேருந்து காங்கேயம் பகுதியில் சென்றபோது, அங்கு வந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.

பின்பு ஓட்டுநரை பேருந்தில் இருந்து இறக்கியதோடு, எங்களை பார்த்து ஹாரன் அடிக்கிறாயா என்று கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்கள் பேருந்து ஓட்டுநர் மேகநாதனை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youths hijacked the government bus and attacked the driver in kangeyam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->