பெரம்பலூர் மாவட்டத்தை பதறவைத்த சம்பவம்.! தீரன் பட பாணியில் அரங்கேறிய கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே தமிழ் திரைப்படம் 'தீரன்' திரைப்பட பாணியில் நள்ளிரவில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து, கத்திமுனையில் நகை, பணம், செல்போன், கார் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

அம்மாபாளையம் மெயின் ரோடு பகுதியில் பாண்டியன்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு ரம்யா என்ற ஒரு மகளும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கமாக முன்பக்கமாக வீட்டை பூட்டிவிட்டு பாண்டியன் - ராஜலட்சுமி மற்றும் மகள் ரம்யா, பேத்தி உள்ளிட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் திடீரென கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

சத்தம்கேட்டு பாண்டியனும் அவரது மனைவி ராஜலட்சுமியும் சத்தம் போட முயற்சித்தனர். அப்போதே அந்த மர்ம கும்பல் இரும்பு ராடை கொண்டு இருவரையும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இருவரும் நிலைகுலைந்து கீழே சரிந்தனர்.

பெற்றோர்களின் சத்தம் கேட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவர் மகள் ரம்யா கீழே வந்து உள்ளார். அவரை கத்திமுனையில் மிரட்டி அந்த மர்ம கும்பல், அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், கார் சாவி மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பரிதிவிட்டு, அவர்களை கட்டிப்போட்டு விட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

ரம்யா வீட்டில் இருந்த செல்போனை எடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அதேசமயத்தில் நள்ளிரவில் தீரன் பட பாணியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய அந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பெரம்பலூர் மக்களிடையே பெரும் பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

theeram movie type robbery in perambalur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->