வங்கியில் கொள்ளை முயற்சி! நகை,பணம் தப்பியது எப்படி? - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அண்ணாசாலையில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இங்கு  ஏராளமான வடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்து செல்வது வழக்கம். கொள்ளை முயற்சி இங்கு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வங்கி பூட்டப்பட்டு இருந்தது. யாருமில்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள்,  நேற்று ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருக்கும் பணம் நகைகளை திருட முயன்றுள்ளனர். 

ஆனால், பூட்டப்பட்டிருந்த  வங்கி லாக்கர்களை திறக்க முடியாததால், பணம் நகைகளை அவர்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்னனர்,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  வங்கியில் பணம் நகை திருடுபோனதா  என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த போது, 
வங்கியில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட எந்த பொருளும் கொள்ளை போகவில்லை என தெரிவித்துள்னனர்.  

மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சமீப காலமாக  வங்கி மற்றும் ஏடிஎம் களில் அடிக்கடி கொள்ளை முயற்சி நடந்துவருகிறது. இவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theft in Bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->