பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம்... கடைகள் அடைத்து தெக்கலூர் மக்கள் போராட்டம்..!!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த இரண்டாம் தேதி செல்வி(47) என்பவர் தெக்கலூர் செல்ல தனியார் பேருந்து ஏறியுள்ளார். ஆனால் நடத்துனர் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நேராக சென்று விடும் கூறி கீழே இறங்க சொல்லியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்து செல்வி கீழே இறங்குவதற்கு முன்பாக ஓட்டுனர் பேருந்து இயக்கியதால் செல்வி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேருந்தின் பின் சக்கரம் செல்வி மீது ஏறியதில், பலத்த காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தெக்கலூர் பகுதி பொதுமக்கள், 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த செல்வியின் இரண்டு மகள்கள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் பேருந்துகள் அனைத்தும் தெக்கலூர் வந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thekkalur people protest by closing the shops for woman death incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->