விவசாயி மீதான என்கவுண்டர்.. வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் (55) கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி லோயர்கேம்ப் பிரிவு வனவர் திருமுருகன் மற்றும் கப்புவாமடை பீட் வனக்காவலர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Farmer murder case filed against forest officers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->