#தென்காசி | அலுவலகத்திலேயே மது போதையில் மயங்கிய பெண் ஊழியர்!  - Seithipunal
Seithipunal


தென்காசி அருகே இருசக்கர வாகன ஷோரூமில், மது போதையில் மயங்கி கிடந்த பெண் ஊழியரால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே இயங்கி வரும் ஒரு இருசக்கர வாகன ஷோரூமில், மதுபோதையில் மயங்கி கிடந்த பெண் ஊழியரை, அவரின் கணவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இரு சக்கர வாகன ஷோரூமில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் அந்த இளம்பெண்ணை அவரின் கணவர் இசக்கி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உள்ளார்.

அப்போது அந்த பெண் வாய்க்குளரி, தடு மாற்றத்துடன் பேசியதை உணர்ந்த கணவர் இசக்கி, நேரடியாக அலுவலகத்தில் வந்து பார்த்துள்ளார்.

அப்போது அவரின் மனைவி மது போதையில் மயங்கி கிடந்துள்ளார், இதனை அடுத்து அவரை மீட்ட இசக்கி, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதித்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ததில், அந்த பெண் தன்னுடன் பணியாற்றும் தங்கராஜ் என்பவர் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்ததால், அவர் மயக்கம் அடைந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தங்கராஜ்-யை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அந்த பெண் மதுவாங்கிக் கொடுக்கக் கோரி அடிக்கடி கேட்டதால் தான், மது வாங்கிக் கொடுத்ததாக தங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi lady staff case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->