தென்காசி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலீஸ் எஸ்ஐ கைது! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு காவல் துறை அதிகாரிகள் பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைலேஷ் என்பவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த சைலேஷை நாகர்கோவில் பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோல் சதீஷ்குமார் என்பவர் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், வீராணம் பகுதியில் வசிக்கும் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.

ஊர் மக்கள் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi POlice SI Arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->