தென்காசி | வார்த்தையை விட்ட அரசு பள்ளி ஆசிரியர்! பதற வைத்த 16 வயது மாணவி! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம்: புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முனீஸ்வரி என்ற முகிலா (வயது 16) என்ற மகள் உள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி உயிரிழந்துவிட்டார். இதனால் மாரியம்மாள் மற்றும் முனீஸ்வரி இருவரும் வசித்து வந்தனர். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தார். 

இந்நிலையில் நேற்று மாலை முனீஸ்வரி, பள்ளி முடிந்து வீடு திரும்பி வந்து திடீரென வீட்டிற்க்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியை பள்ளி ஆசிரியர்கள் திட்டியதாக தெரிய வந்தது. 

இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi school student suicide Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->