"மாட்டுக்கறி சாப்பிட்டா எப்படிலே படிப்பு வரும்? ஆசிரியரின் சாதி வன்மம்., சிறுவன் தற்கொலை.!
thenkasi teachers scolding dalit student in caste issue
தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் என்ற கிராமத்தில் மாரியம்மாள்- ஆறுமுகம் தம்பதிக்கு சீனு என்ற இளைய மகன் இருந்துள்ளார். இவர், அதே பகுதியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். சிறுவனின் மரண துயரத்தில் இருந்த மாரியம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் பிள்ளையை ஆசிரியர்கள் மோசமாக திட்டி இருக்கின்றனர். மாட்டு கறி சாப்பிடும் உனக்கு படிப்பே வராது.
பேசாமல் படிப்பை விட்டு விட்டு குப்பை பொறுக்க போ." என்று அவமானப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்த புகாரை தலைமை ஆசிரியரிடம் எனது கணவர் புகார் கொடுத்தார். அந்த புகாரை ஏற்க மறுத்த தலைமையாசிரியர், "இப்படி எல்லாம் திட்டுவது கஷ்டமாக இருந்தால், உங்கள் சாதிக்காரன் பள்ளிக்கூடத்தில் போய் படிங்க." என்று எகத்தாளமாக பேசியுள்ளார்.
இதை அறிந்த ஆசிரியர்கள், "எங்கள் மீது புகார் கொடுக்கிறாயா? நீ இந்த பள்ளிக்கூடத்தை விட்டு எப்படி பாஸ் ஆகி வெளியில் போகிறாய் என்று பார்க்கலாம்." என சீனுவை மிரட்டி இருக்கின்றனர். இதனால் மன உளைச்சலிலும், பயத்திலும் இருந்த சீனு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினரோ, யாரும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அத்துடன் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பேசியபோது, "பள்ளியின் மீது புகார் வந்ததால் டி.ஈ.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பள்ளி மீது தவறு இருப்பதாக தெரியவில்லை.
பள்ளிக்கு தற்போது விடுமுறை இருப்பதால் மாணவர்களிடம் சென்று விசாரிக்க முடியவில்லை. மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து அதிகாரிகளும், பள்ளி நிர்வாகமும் அலட்சியமாக பதில் அளித்து இருப்பது கொந்தளிப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thenkasi teachers scolding dalit student in caste issue