கோவையில் வர உள்ள ஸ்ட்ரீட் புட் தெரு, விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு !! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் வ.உ.சி.பார்க் அருகில் உள்ள உணவுத் தெரு ரோட்டு உணவுக்காக புகழ் பெற்றது, மேலும் இதை விரிவு படுத்துவதற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த தெருவில் மத்திய அரசின் நிதியில் 20க்கும் மேற்பட்ட ரோட்டு  கடைகள் குடிமைப் பிரிவால் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நகர முனிசிபல் கார்ப்பரேஷன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானத்தை தொடங்கியது. இந்த கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இம்மாதத்திற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் கார்ப்பரேஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை பற்றி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் பேசுகையில், "விஓசி பார்க் சாலையில் 24 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கான வாடகை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. வாடகையை வரி மற்றும் வருவாய்க் குழுவில் பேசி இறுதி முடிவு செய்யப்படும். ஆர்வமுள்ள ஏலதாரர்களுக்கு விலைகள் ஏலம் விடப்படும் என்று கூறினார்.

மேலும், "சிசிஎம்சி கவுன்சில் திறப்பு விழா குறித்து முடிவு செய்யும். தற்போது புதிய கடைகளுக்கு எதிரே தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து வரும் தெருவோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழி வகுக்கும் வகையில் உணவு வீதி திறக்கப்பட்டதும் அகற்றப்படும்," என்று அதிகாரி கூறினார்.

இப்பொது உள்ள சூழ்நிலையில், கோவை  ​​VOC பார்க் சாலையில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர், மேலும் அந்த கடைகள் பத்துக்கு எட்டு அளவுகளில் மட்டுமே 24 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய கடைகளை ஒதுக்குவது குறித்து தெருவோர வியாபாரிகள் கவலை தெரிவித்ததுடன், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளால், சாலையின் அகலம் சுருங்கி, வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

there will be more shops in voc parks


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->