பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்தப் பேருந்து இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதி அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 34 பேர் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீது உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது பேருந்தின் அச்சு முறிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirty four peoples injured accident in viruthunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->