சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட தமிழகத்தில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதரத் துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சுகாதாரத் துறை செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளராக எஸ்.கே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வணிகவரித்துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் உட்பட மொத்தம் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அதி முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களின் செயலாளர்கள் பெரிய அளவில் மாற்றப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirty seven IAS officers transferred in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->