திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் - பக்தர்கள் அச்சம்..!!
thiruchenthur sea intruded
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முதலில் அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு பின்னர் அருகிலுள்ள நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதற்கிடையே அக்னி தீர்த்தக் கடல் கடந்த சில காலமாக உள்வாங்குவது உண்டு. அதிலும் ஒவ்வொரு மாதமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும் வழக்கம்.
இந்த நிலையில், சித்திரை அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருப்பினும், பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடியதுடன், தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
English Summary
thiruchenthur sea intruded