ஒருவர் கையில் திரையரங்குகள்... ரெட் ஜெயன்ட் மூவிஸை சொல்கிறாரா..?? நெட்டிசன்களுக்கு சந்தேகம்..!!
Thirumavalavan alleges Tamil cinema become corporate center
இரும்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர் "சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக சினிமாவை மாற்றலாம். சினிமாவை கலைக்காக மட்டும் ரசிக்க வேண்டும் என்பார்கள். அப்படி இல்லாமல் சினிமா சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்க வேண்டும். திரை உலகம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது. திரைத்துறையில் பெரும்பணம் கொண்டு வருகிறார்கள் எல்லாவற்றையும் கார்ப்பரேட் மையம் ஆக்குவது ஆபத்தானது.
முன்பெல்லாம் 30 லட்சத்தில் படம் எடுத்தார்கள், குறைந்த தொகையை விநியோகம் செய்தார்கள். ஆனால் இப்போது அவ்வாறு இல்லை, ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்.? திரைத்துறை கார்ப்பரேட் மையத்திற்கு இறையாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர்கள், விநியோகிஸ்தர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திரை உலக தொழிலாளர்களின் உரிமை பறிபோகிறது.
நான் யாருக்கும் எதிராக பேசவில்லை. எனக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. நடிகர் எம்.ஜி ஆர் வசனம் எழுத மாட்டார், பாடல் எழுத மாட்டார், இசையமைக்க மாட்டார். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என கூறுவார். சமூக நீதி பேசுவோர் கையில் தமிழ் திரை உலகம் இருக்க வேண்டும்" என விழா மேடையில் பேசியுள்ளார். திருமாவளவனின் இத்தகைய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தை திருமாவளவன் மறைமுகமாக பேசுகிறாரோ..?!! என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Thirumavalavan alleges Tamil cinema become corporate center