மாநில அளவில் மட்டுமின்றி.. தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்-தொல்.திருமாவளவன்.!
Thirumavalavan request to national level tasmac closed
மது அருந்தும் கூடங்களை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும் என விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மது அருந்தும் கூடங்களுக்கு (BAR) உரிமை வழங்கும் அதிகாரம் கலால் வரித் துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும், டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை விற்க மட்டுமே அனுமதி மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை நடத்த அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடை அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். டாஸ்மாக் மது அருந்தும் கூடங்கள் உரிமை வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மது அருந்தும் கூடங்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "மது அருந்தும் கூடங்களை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பது மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையட்டும். தீர்ப்பளித்த நீதிபதிக்கு எமது பாராட்டுக்கள் மாநில அளவில் மட்டுமன்றி தேசிய அளவில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Thirumavalavan request to national level tasmac closed