மாணவர்கள் சாதி ரீதியான கயிறு அணிவதை கண்காணிங்க! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னதுரை மற்றும் அவருடைய மகள் சந்திரா செல்வி ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இரவு 10:30 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம கும்பலால் வெட்டப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சின்னதுரையுடன் பயிலும் மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை தந்ததால் அவரது தாய் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை எடுத்து இந்த சம்பவம் அரங்கேற்றியது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 சிறார்களை தற்போது வரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் தம்பி மகனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. 

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் "சாதிய மோதல் ஏற்பட்ட பள்ளியில் விரிவான விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று மாவட்டம் முழுவதும் சாதிய மோதல்கள் உள்ள பள்ளிகள் கண்டறிந்து அப்பள்ளிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளியில் மாணவர்கள் சாதி ரீதியான கயிறுகளை அணிவதை கண்காணிக்க நடவடிக்கை எனக்கு அறிவுறுத்தியுள்ள அவர், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கு மனநல பயிற்சி வழங்கவும் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunalveli collector ordered watch out for school students wearing caste ropes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->