திருப்பத்தூரில் பெரும் சோகம்! மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருமாபட்டு பகுதியில் முருகன் என்பவரின் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில், வனவிலங்குகளை வேட்டையாட சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மின்வேலியில் சிக்கிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ் மற்றும் கரிபிரான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் குரிசிலாப்பட்டு போலீசார் மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் கிடந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை: வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் உலா வந்த கரடி கடித்ததல், வடஇந்திய தொழிலாளி ஒருவர் காயமடைந்து உள்ளார்.

காயமடைந்தவர் மீட்ட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupattur Electric Fence 3 people death TNPolice 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->