திருப்பதி செல்லும் வழியில் கொடூர விபத்து! தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி!
Thiruppathy Car Accident
திருப்பதி மாவட்டம் பாகாலா நகரம், தோட்டப்பள்ளி அருகே இன்று பிற்பகல் நடந்த சாலை விபத்து பெரும் சோகம் ஏற்படுத்தியது.
சாலையில் முன்னே சென்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற கார் ஒன்று, அதில் வேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் ஒசூர் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தேவையான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
காரின் வேகமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.