தமிழக அரசு பேருந்தில் இருந்து தலைதெறிக்க ஓடிய திருமண கோஸ்ட்டி.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த தமிழக அரசு பேருந்தை, போலீசார் வழி மறித்து நிறுத்தினர்.

பேருந்தை உடனடியாக நிறுத்திய நிறுத்தியதும், போலீசாரை பார்த்த பயணிகள் அனைவரும், பேருந்தில் இருந்து குதித்து, நாலாபுறமும் தலைதெறிக்க தப்பி ஓடினர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தப்பி ஓடிய அவர்களை விரட்டிப் பிடிக்க பின் சென்றனர். ஆனால், அவர்கள் யாரையும் போலீசார் போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்த 32 பேரும் திருமணத்திற்கு செல்வது போல் உடைகள் அணிந்து இருந்ததாக, என்ன நடக்கிறது என்றே தெரியாத பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போலீசாரிடம் தெரிவித்தனர். 

இதனை அடுத்து, தமிழக அரசு பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், பேருந்தில் பயணம் திருமணத்திற்கு செல்வது போல் பயணிகளாக வந்தவர்கள் அனைவரும், திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. தப்பி ஓடியவர்கள் அனைவரையும் விரைவில் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupthur govt bus some incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->