இப்படி குறுந்தகவல் வந்தால் நம்பாதீர்கள்.. திருவள்ளூவர் ஆட்சியர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பிரபலங்கள், அரச்சு அதிகாரிகள் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்குகள் தொடங்கி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல  முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் புகைப்படம் வைத்த போலி கணக்கில் இருந்து அமேசான் பரிசு பொருட்களை அனுப்புமாறு அதிகாரிகல் கேட்பது போல மெச்சேஜ் செய்துள்ளனர். எனவே இதுபோன்ற  குறுந்தகவல்களை நம்பி பணமோ, பரிசு பொருட்களோ  யாரும் அனுப்ப வேண்டாம் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Collector Message to People


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->