பட்டப்பகலில் வாலிபர் கொடூர கொலை.. திருவள்ளூரில் பேரதிர்ச்சி.. அதிர்ந்துபோன மக்கள்.!
Thiruvallur Kakkalur Murder Case Police Investigation
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூரில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் ஒருவரை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், திருவள்ளூர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்த தினேஷ் (வயது 33) என்பது தெஇர்யவந்துள்ளது. இவருக்கு அனிதா என்ற 26 வயது மனைவி உள்ள நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்துள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் இருவரும், கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்திலேயே தினேஷ் பலியான சூழலில், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur Kakkalur Murder Case Police Investigation