4 முறை நிலச்சரிவு! 7 பேர் பலி, 6 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு! சோகத்தில் மூழ்கிய தமிழகம்!
Thiruvannamalai Land Slide update
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் 4வது இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றுக்கு கனமழை காரணமாக மலைச்சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று சோமவார குளம் மேல் பகுதியில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து 3வது மற்றும் 4வது இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
முதல்முறை நடந்த நிலச்சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கிய நிலையில், 6 பேரின் உடல்கள் சடலமாக தற்போது மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர்.
மழை குறுக்கிட்ட போதிலும் 12 மணி நேரத்தீற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
English Summary
Thiruvannamalai Land Slide update