கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு, வடை எடுக்கும் நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள்.! ஆடிப்பூர ஸ்பெஷல்.!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் பகுதியில் துரிஞ்சிகுப்பம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் கோவில் இருக்கின்றது.

இதில் இன்று ஆடிப்பூர விழா மக்களால் கொண்டாடப்பட்டது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று காலை 108 பால்குட அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல் மதியம் அன்னதானம் வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்றன.

இன்று பிற்பகல் நேரத்தில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்தல், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

அத்துடன் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு மாலை அணிவித்தனர். இன்று இரவு அம்மன் திருவீதி உலா மற்றும் நாடகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai thurnjikuppam adhiparasakthi temple function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->