திருவாரூர் : ரூ.50 ஆயிரம் பணத்துடன் புதிய லேப்டாப் - நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருவாரூர் : ஆன்லைன் மூலம் வாங்கிய லேப்டாப் பழுதானதால், அதனை மாற்றி தரவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்திற்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு பிரபல ஆன்லைன் வணிக நிறுவனத்தில் 32999 ரூபாய்க்கு லேப்டாப் ஒன்றை வாங்கி உள்ளார்.

ஆனால் இவர் வாங்கிய அன்றே அந்த லேப்டாப் செயல்படாமல் இருந்துள்ளது. இது குறித்து நவநீதகிருஷ்ணன் அந்த ஆன்லைன் நிறுவனத்திற்கு பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் அந்த ஆன்லைன் நிர்வாகம் எடுக்கவில்லை.

இதனால் விரத்தி அடைந்த நவநீதகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணனின் லேப்டாப்பை மாற்றி கொடுக்க, அந்த ஆன்லைன் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நவநீதகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 50,000 ரூபாயையும், வழக்கு செலவுக்கு ரூபாய் 10 ஆயிரமும் அந்த ஆன்லைன் நிறுவனத்திற்கு விதித்து உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur muthupet laptop consumer case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->