திருவாரூர்|| அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் 150-க்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும்  நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து பெருங்கடம்பனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் பேருந்தை மறைத்துள்ளனர்.

இது குறித்து பேருந்து நடத்துனர்அவர்களிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அருகில் கிடந்த கண்ணாடித் துண்டால் நடத்துனரின் தொடையில் குத்தியுள்ளனர்.

இதனையடுத்து, நடத்துனர் இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்கள் நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் நான்கு பேர் மீதும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், திருவாரூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து இயங்கக்கூடிய 70 பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், காலை 7 மணிக்குள் செல்ல வேண்டிய 15 பேருந்துகளும் வெளியேறவில்லை.

இதனையடுத்து நாகை மண்டல துணை மேலாளர் நேரில் வந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur State Transport Corporation drivers and conductors strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->