திருவொற்றியூர் அரசு மேல்நிலை பள்ளியில் மர்ம கும்பலால் திருட்டு! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருவொற்றியூர் அரசு மேல்நிலை பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் மர்ம நபர்கள் திருடி, 3 வகுப்பறைகளில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்: 

திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட தேவையான கிரிக்கெட் மட்டை, வாலிபால், உள்ளிட்ட உபகரணங்கள் பள்ளியில் உடற்கல்வி அறையில் வைக்கப்பட்டிருந்தது. 

நேற்று காலை உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு உபகரணங்கள் எடுக்க உடற்கல்வி அறைக்கு சென்ற போது அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே 
சென்று பார்த்த போது அங்கிருந்த கிரிக்கெட் மட்டை, வாலிபால்கள் போன்ற ஏராளமான பொருட்கள் காணவில்லை. 

இதனை தொடர்ந்து பள்ளியில் 3 வகுப்பறைகளில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டிருந்ததை பார்த்த ஆசிரியர்கள், இந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து தலைமை ஆசிரியர் பாலாஜி திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்ததில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பள்ளியில் விளையாட்டு உபகரணங்களை திருடி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvottiyur government school theft


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->