ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இப்படி ஒரு நிலைமையா!...நண்பரிடமே கைவரிசை காட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அவரின் நண்பரிடமே கைவரிசை காட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்க அறிக்கையில், நாட்டில் போலி சுயவிவரங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், எனது சமீபத்திய புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான பேஸ்புக்  சுயவிவரம் ஒன்றை உருவாக்கி, CRPF-ல் உள்ள ஒரு நண்பருக்கு,  அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, அமன் சிங்கிற்கு ஒரு செல்லுடன் செய்திகளை அனுப்பபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து  போலீசாரிடம் தெரிவிக்க உள்ளதாகவும்,  என்னிடம் ஒரே ஒரு  பேஸ்புக் சுயவிவரமும், இஸ்டாகிராம் சுயவிவரமும் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு நண்பர் கோரிக்கையையும் ஏற்காதீர்கள் அல்லது எந்த மெசஞ்சர் கோரிக்கைக்கும் பதில் அளித்து ஏமாறாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பதிவிற்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே இப்படி ஒரு நிலை என்றால் சாதாரண மனிதர்களின் நிலை எப்படி இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is the situation for an ias officer shocking incident when he tried to show his hand to his friend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->