நாடக காதலனை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய பெண்ணின் அண்ணனை தேடும் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் தங்கையின் காதலனை கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே உள்ள தையல் கடையில் ஒன்று பணிந்து வரும் உதய குமார் என்பவரும், பக்கத்துக் கடையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு உதயகுமாரின் தையல் கடைக்கு சென்ற அந்த இளம் பெண்ணின் அண்ணன் முத்துராமன் மற்றும் அவரின் நண்பரும் சேர்ந்து, உதயகுமார் இடம் தகராறில் ஈடுபட்டனர். 

அப்போது ஆத்திரமடைந்த முத்துராமன், தான் எடுத்து வைத்திருந்த கத்தியால் உதயகுமாரின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துராமன் மற்றும் அவர் என் நண்பரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi sivan kovil theru attempt murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->