'பெரியாரை இழிவுபடுத்துவோர் ஈனப்பிறவிகள்'.. துரை வைகோ ஆவேசம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான் என்றும் நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று எம்.பி. துரை வைகோ தெரிவித்தார்.

சமீப காலமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோவிடம் பெரியார் குறித்து சீமான்  பேசியது  தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த துரை வைகோ, "பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான் என்றும்  நான் இந்து பக்தன் தான் என்றும் எல்லா கோவிலுக்கும் போவேன்என்றும்  அதேநேரத்தில் தந்தை பெரியார் இல்லாமல் சமூகநீதி கிடையாது என கூறினார் . மேலும் சமூக வளர்ச்சி கிடையாதுஎன்றும்  குறிப்பாக பெண்கள் படிக்கலாம், வேலை செல்லலாம் என்று சம உரிமை கொடுத்தது பெரியார் தான் என கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய எம்.பி. துரை வைகோ,நம்முடைய இளைஞர்களுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம் என்றும்  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான்என்றும்  நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

'Those who insult Periyar are wretched creatures Durai Vaiko is furious


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->