சமையல் அறையில் இந்த பிரச்சனையா - இதோ டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


என்னதான் நாம் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் சில பிரச்சனைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்போம். அப்படி சில குறிப்புகளை இங்குக் காண்போம்.

* வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அந்த இடத்தில் கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை நீங்கும்.

* ஒரு டம்பளர் தண்ணீரில் நான்கு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரங்கள் கறுப்பாவதை தடுக்கலாம்.

* குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றி பூ வைத்தால் கீழே விழாது.

* துணிகளில் எண்ணெய் கரையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் வீட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

* எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

* வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும், ஓட்டை அடைபடும்.

* அடிக்கடி உபயோகிக்காத ஷூக்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.

* ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக இருக்கும்.

* வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பாக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kitchen tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->