கோடை விடுமுறையில் விக்ரமின் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ?
Will Vikram's Dhruva Natchathiram release during the summer vacations
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தொட ங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது.
இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. ஆனாலும், இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில் சமீபத்தில் கவுதம் மேனன் கலந்துக் கொண்ட நேர்காணல் ஒன்றில் இதனைப் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் " மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிப்பெற்றது.
எனக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அப்படத்தின் வெற்றி துருவ நட்சத்திரம் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது. திரைப்படம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் ஏறக்குறைய முடிவடைந்தது.
இதனால், இப்படியே சூழல் சரியாக இருந்தால் திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகி கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Vikram's Dhruva Natchathiram release during the summer vacations