ரேஷன் கடைகளில் ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு!...உடனே அப்ளை பண்ணுங்க!...விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
Thousands of jobs in ration shops apply now last day to apply
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வரும் நிலையில், இந்த ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.
அந்த வகையில், 38 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9 -ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த பணிக்கு விண்ணபிக்காதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில், ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும் என்றும், ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும் என்றும், ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Thousands of jobs in ration shops apply now last day to apply