மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காணாமல் போன ஆவணங்கள் - 3 ஊழியர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காணாமல் போன ஆவணங்கள் - 3 ஊழியர்கள் கைது.!

மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முறையாக பராமரிப்பதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இந்த அறைகளில் இருந்து குற்றவியல் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் காணாமல் போனதாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்தனர். 

இதைக்கேட்டு அதிற்சியடைந்த நீதிமன்ற பதிவாளர் உயர்நீதிமன்ற போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நீதிமன்ற ஊழியர் ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three employees arrested for documents missing in madurai hc


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->