பள்ளி மாணவர்கள் வாகனத்தை ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 மாதம் சிறை.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களில் அதிக விபத்துகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களால் தான் ஏற்படுகின்றது. 

இந்த விபத்துகளில் அதிகளவு தலையில் அடிபடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் அவர்கள் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்படி, அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். 

இதையடுத்து, இரண்டாவது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 194 (D) -ன் படி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். 

மேலும், பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். மேலும், பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் சிறுவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்களுக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். 

பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்திட வேண்டும். ஆகவே, அனைவரும் பாதுகாப்பாக, வாகனத்தை விபத்தில்லாமல் இயக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தை மோட்டார் வாகன விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three month jail penalty to parents for school students drive bike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->