தென்காசி அருகே மூன்று பேரை தாக்கிய கரடி உயிரிழந்தது! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டமணி என்பவர் சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் கொண்டு சென்றார். அவர் வனப்பகுதியின் நடுவில் அமைந்த சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி, இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்டமணியையும் கடித்து குதறியது.

(மாதிரி புகைப்படம்)

 கரடியை விரட்டி வைகுண்டமணியை காப்பாற்ற வந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி தாக்கி கடித்துக் குதறியது. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முகமாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

வனத்துறையினர் கரடிக்கு இரண்டு மயக்க மருந்து ஊசி செலுத்தனர். இதனால் மயக்கம் அடைந்த கரடியை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர். அந்த கரடியை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் இன்று காலை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three people attacked bear was died near Tenkasi forest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->