ஆட்டோவில் பணம் கடத்திய நபர்கள் - ஓட்டுநர் செய்த அதிர்ச்சி சம்பவம்.!
three peoples arrested for kidnape hawala money
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வருபவர் சுந்தரராஜ். இவரது ஆட்டோவில் நேற்று மூன்று பேர் சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களது நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது ஆட்டோ ஓட்டுநர் யானை கவுனி காவல் நிலையம் முன்பு ஆட்டோவை நிறுத்தியதையடுத்து அங்கிருந்த காவலர்களை அழைத்துள்ளார்.
உடனே ஆட்டோவில் இருந்த மூன்று பேரும் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் வந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து அவர்கள் கையில் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், ஒரு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த யாசிர், தாவூத், ஃபைசுல்லா என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ஹவாலா பணம் 1 கோடி ரூபாயை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் ஹவாலா கும்பலை சாதுரியமாக பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
three peoples arrested for kidnape hawala money