கன்னியாகுமரியில் சோகம் - மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் சோகம் - மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்தன் விளை பகுதியை சேர்ந்தவர்கள் சாம் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். இதில், மகள் ஆதிரா 8 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில், அஸ்வின் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது பால் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அவர்களின் வீட்டின் அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின் ஒயர் அறுந்து கிடந்தது. அதில் இருந்து மின்சாரம் அஸ்வின் மீது பாய்ந்தது. இதனால், அஸ்வின் கதறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த சித்ரா மகனை காப்பாற்றச் சென்றுள்ளார்.

ஆனால், தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்தது. தாய் மற்றும் தம்பி இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது. இதனால், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். 

அங்கு மூன்று போரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died electric shock attack in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->