நள்ளிரவில் நேர்ந்த கொடூரம் - விபத்தில் சிக்கி தாய் உளப்பட 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


நள்ளிரவில் நேர்ந்த கொடூரம் - விபத்தில் சிக்கி தாய் உளப்பட 3 பேர் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே மன்னார்புரத்தை சேர்ந்தவர், ரிச்சர்ட்ராஜா. கோயம்புத்தூரில் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி மெர்லின். இந்தத் தம்பதியினருக்கு ரோஷினி என்ற மகளும், ரோகித் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் காரில் வந்த ரிச்சர்ட் குடும்பத்துடன் நேற்று முன்தினம் மீண்டும் கோவைக்குத் திரும்பியுள்ளார்.

இவர்களுடன் ரிச்சர்டின் சகோதரர் ஜான்சன் ராஜாவும் சென்றுள்ளார். இதையடுத்து இந்த கார் கோவில்பட்டி, சாத்தூர் இடையே நள்ளிசத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில், ரிச்சர்டின் மகன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் போலீசார் உயிருக்கு போராடிய நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரிச்சர்டின் மனைவி மெர்லின் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என்று 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->