பல்லடம் அருகே பரபரப்பு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொலை.!
three peoples murder in tirupur palladam
பல்லடம் அருகே வீடு புகுந்து மூன்று பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சேமலைகவுண்டன்பாளையம் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு உள்ளிட்ட மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரையும் கம்பி அல்லது கட்டையால் தாக்கியிருக்காலம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples murder in tirupur palladam