திருச்சியில் பரபரப்பு - கல்லூரி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு - சிசிடிவியில் சிக்கிய மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே கண்ணனூரில் ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று முன்தினம் வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது, தேவையில்லாமல் அங்கு நடமாடிய ஒரு மாணவரை, முகாம் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரிப் பேராசிரியருமான முகிலன் இருக்கையில் சென்று அமருமாறு தெரிவித்துள்ளார். 

அதற்கு, அந்த மாணவர் மறுப்புத் தெரிவித்ததனால் அவரை முகிலன் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் கோபத்துடன் அங்கிருந்து வெளியே சென்று மது அருந்திவிட்டு திரும்பி வந்து பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் அந்த மாணவரை கண்டித்ததுடன், அவருடைய அடையாள அட்டையையும் வாங்கி வைத்துக்கொண்டார். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த மாணவர் அன்று இரவு தனது சக நண்பர்கள் மூன்று பேருடன் வந்து கல்லூரி நுழைவுவாயில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் அதே கல்லூரி மாணவர்கள் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, போலீசார் மாணவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three students arrest for bomb attack to college wall in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->