வேலைக்கு சென்ற போது நேர்ந்த கொடூரம் - ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி.!
three womans died and 14 peoples injured accident in thenkasi
தென்காசியில் லோசு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளம் பகுதிக்கு விவசாய பணிக்கு சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three womans died and 14 peoples injured accident in thenkasi