அட கடவுளே! ஓட்டலில் திடீரென தலையில் விழுந்த மின்விசிறி! 3 வயது குழந்தை படுகாயம்! - Seithipunal
Seithipunal


ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மின்விசிறி தலையில் விழுந்ததில் மூன்று வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் விநாயகம். இவரது தனது மூன்று வயது மகன் பிரணிக்கா. இவர்கள் அனைவரும் கோவிலம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பத்தன்று வீட்டில் சாப்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், சாப்பாடு செய்வதற்கு காலம் தாமதமாகும் என்பதாலும் பிரணிக்கா சாப்பாடு கேட்டதாலும் குடும்பத்தினர் அனைவரும்  அதே பகுதியில் உள்ள சிறிய ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

ஓட்டலில் உணவுகளை வாங்கி குடும்பத்தினர் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஓட்டலில் இருந்த மின்விசிறி  திடீரென கயன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை பிராணிக்கா தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அது குழந்தை தலையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three year old child was injured when a fan fell on his head while he was eating in a hotel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->