லாரி ஓட்டுநர்களைத் தாக்கி கொள்ளை - கையும் களவுமாக சிக்கிய  வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


லாரி ஓட்டுநர்களைத் தாக்கி கொள்ளை - கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஜூஜுவாடி சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், அங்கு லாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் லாரி ஓட்டுனர்களை கட்டையால் கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினர். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே உள்வட்ட சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி உள்ளனர். 

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் சிக்கியவர்கள் லாரி ஓட்டுனர்களை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three youths arrested for robbery in osur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->